சர்வதேச சட்டத்தை மீறிவரும் சிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 நாடுகளை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை அளித்துள்ளார். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கிளர்சி நடந்து வருகிறது இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மனித நேய அடிப்படையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வழி விட வேண்டும் என ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளாததால் சிரியா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.