-மு. குலசேகரன், ஏப்ரல் 27, 2014.
கடந்த அக்டோபர் 2013 இல் தாக்கல் செய்யப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் நஜிப் பாலர் பள்ளிகள் அமைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில் தேசியமாதிரி சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 93 பாலர் பள்ளிகள் அமைப்பதற்கு கணிசமான தொகையையும், மலேசிய இந்தியர்களை தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்காக ரிம100 மில்லியனும், 176 பாலர் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டிற்காக ரிம28 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டின் நான்கு மாதங்கள் கடந்த பின்பும் இந்த ஒதுக்கீடுகளை பயன்படுதுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எந்தத் தமிழ்ப்பள்ளிகளுக்கு பாலர் பள்ளிகள் தேவை, எவ்வளவு ஒதுக்கீடுகள் இப்பள்ளிகளுக்கு கிடைக்கும், யார் இதைக் கட்டப்போகிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. பாலர் பள்ளிகளின் தேவை அதிகம் உள்ளது. அரசாங்கமும் அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த இரண்டையும் இணைத்து செயலில் இறங்க வேண்டியது யாருடைய பொறுப்பு? கல்வி அமைச்சுதான் இதனைச் செய்ய வேண்டும் என்பது அனைவற்கும் தெரியும். ஆனால், இதுவரை கல்வி அமைச்சு செயலில் இறங்கி விட்டதிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
கல்வி அமைச்சுக்கு உதவி தேவைப்பட்டால் தற்பொழுது பேராசிரியர் என்.எஸ் இராஜேந்திரனின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரைவுக் குழுவிடம் ஒப்படைக்கலாமே! பிரதமர்துறையின் கீழ் இயங்குவதாலும் தமிழ்ப்பள்ளிகள் அவரின் நேரடி பார்வையில் இருப்பதாலும், இப்பொறுப்பினை அந்தக் குழுவிடம் வழங்குவதன் வழி கல்வி அமைச்சின் சுமையும் குறையும் வேலையும் ஒழுங்காக நடைபெறுமே!!
நிதியை பள்ளி வாரியங்களிடம் கொடுப்பதே நல்லது
இப்பொழுதெல்லாம் பள்ளி வாரியங்களில் நிறையவே படித்தவர்களும் பொறுப்பானவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே, அரசாங்கம் நிதியை நேரடியாகவே பள்ளி வாரியங்களிடம் வழங்குவதன் வழி அரசாங்கத்தின் பணம் விரயமாகாமலும், காலம் தாழ்த்தப்பாடாமலும், அதன் நோக்கத்திற்கேற்ப செலவிடும் சாத்தியமும் அதிகமாக உள்ளது.
பள்ளி வாரியங்களில் உள்ளவர்கள் பள்ளியில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாலும் பள்ளியின் முன்னேற்றத்தில் மற்றவர்களைவிட அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பதாலும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் அதிக அக்கறையும் முனைப்பும் காட்டுவர் என்று நம்பலாம்.
கல்வி அமைச்சு வேண்டுமானால் அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு சரியான அதிகாரிகளைக் கொண்டு மேற்பார்வை இடலாம். தேவையானால், அவை முறையாக நடைபெற்றதா என்பதற்கு கணக்காய்வு செய்யலாம். மேலும், கடந்த பெப்ரவரி மாதம் தமிழ்ப்பள்ளிகளின் திட்ட வரைவு அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் கூறி இருந்தது போல, மானியங்கள் நேரடியாக பள்ளி வாரியத்திடம்கொடுப்பதே உத்தமமானது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நானும் இந்த பரிந்துரையை பெரிதும் வரவேற்கின்றேன்.
அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிகள், குறிப்பாக பாலர் பள்ளிகளுக்கும், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கும் வழங்கப்பட்ட நிதிகள், பெரும்பாலும் ஒரு சில அரசு சாரா இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் அவை முறையாக சேர வேண்டிய இலக்கை அடையவில்லை என்பது பற்றியும் பத்திரிக்கைகளில் அதிகமாக எழுதப்படுவதை நான் கவனிக்கின்றேன்.
இது போன்ற சமுதாயச் துரோகச் செயல்கள் தொடர்வதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. அதோடு அரசாங்கமும் இந்த விசயத்தில் இன்னும் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். அரசு செய்யவேண்டிய கடமைகளை வெளியாட்களைக் கொண்டு செய்யச் சொல்வது பொறுப்பற்ற செயலாகும். பாலர்பள்ளி கட்டுவதற்கும் , கல்வி மேம்பாட்டுக்கும், தொழில் திறன் வளர்ச்சிக்கும் ஒதுக்கப்படும் நிதிகளை அரசாங்கம் அரசு சாரா அமைப்புகளிடம் வழங்கி விட்டதன் மூலம் அதனுடையக் கடமையைச் செய்துவிட்டதாக எண்ணி கை கழுவி விடக் கூடாது. பாலர் பள்ளி நிறுவது முதல் அது செயல்பட ஆரம்பிக்கும் வரை கண்காணிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
கணக்கு கேட்பேன்
அரசு சாரா அமைப்புகள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் மொழிக்கும் செய்யும் சேவை அரசாங்கம் செய்யும் முதன்மைப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர அவையே அரசாங்கத்தின் வேலையை செய்யக் கூடாது என்று நான் கருதுகிறேன்.
அந்த வகையில் எத்தனையோ கோடி வெள்ளி கடந்த காலங்களில் ஊர் பேர் தெரியாத அரசு சாரா இயக்கங்களுக்கு கொடுக்கப்பட்டு அவை போன இடம் தெரியாமல் இருக்கிறது. இந்தத் தவறுக்கெல்லாம் அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் நிதி கொடுக்கும் முறையிலும் இருக்கும் கோளாறுதான் காரணம்.
இது குறித்து அடுத்த நாடாளுமன்றத் கூட்டதில், எந்த எந்த அரசு சாரா இயக்கங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் யார் யாரென்று குறிப்பிட வேண்டுமென்று எழுத்து மூலமாக கேள்வி எழுப்ப உள்ளேன்.
56 கோடி வெள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கபட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தப் பணம் எப்படி செலவழிக்கப்பட்டது என்பதற்கு முறையான விளக்கங்களை இதுவரை திருப்தி அளிக்கும் வகையில் எந்த தரப்புமே வெளியாக்கவில்லை. முன்னாள் அமைச்சர்களும் இன்னாள் அமைச்சர்களும் அந்தப் பணம் சரியாகத்தான் செலவு செய்யப்பட்டது என்று எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும், அந்தப் பெருந்தொகையின் தாக்கத்தை எந்த வகையிலும் நம்மால் பார்க்க முடியவில்லை.
இந்த 56 கோடிக்கான விரிவான செலவுப் பட்டியலை, எந்தப் பள்ளிக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, என்ன மாதிரியான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, அவை பூர்த்தியாகி விட்டனவா என்பன போன்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் விளக்கம் கொடுக்க வேண்டும்.
எல்லாம் சரி தான் !ஒரு பள்ளியில் அதிகார பூர்வ பாலர் பள்ளி அமைப்தில் உள்ள சிரமங்கள் என்ன தெர்யுமா வை பி அவர்களே ?
பள்ளி அமைக்குமா?
LPS அமைக்குமா?
PIBG அமைக்குமா?
தனியார் நிறுவனம் அமைக்குமா?
தனி நபர் அமைக்கலாமா தகுதி என்ன?
ROB கு போனால் மாநில கல்வி இலாகாவுக்கு போகணும் ?
கல்வி இலாகாவுக்கு போனால் முதலில் கட்டடத்தை கட்டி
எல்லா விதிகளையும் சமர்பிக்க வேண்டும்.
நிலம் வேண்டும் ? நிதி வேண்டும்? பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டும்?
இதை எல்லாம் மீறி தலைமை ஆசிரியர் ஆராதனை வேண்டும்?
இப்போது உங்கள் கேள்விக்கு பதில் விளங்கி இருக்கும் என்று
நம்புகிறேன்.
பாலர் பள்ளி அமைக்க மாநில கல்வி இலாக்கா வைத்துள்ள SYARAT டை போய் பாருங்கள்? ROB வைத்துள்ள syaratai போய் பாருங்கள்? நான் இங்கு எழுதினால் உங்களுக்கு தலை சுத்திவிடும்.
ஸ்ரீ முருகன் பாலர் பள்ளிக்கு எதோ ஒரு பேரு வெச்சி 28 மில்லியன் அரசிடம் வசூல் பண்ணி அவர்களாலே செய்ய முடியல காசு போன இடமும் தெரியல.? நாங்க தமிழ் பாலர் பள்ளி வளர பிச்சை எடுக்க போராடும் போராட்டம் ஒரு துப்பு கெட்ட புழப்பு?
பெர்மிட் கேட்டா ….கட்டடம் வேணுமாம் …கட்டடம் நிலம் இருந்தால் மாவட்ட மன்ற லைசன் வேணுமாம் …கல்ல கண்டா நாய காணோம் நாய கண்டா பூனைய காணோம் எல்லாத்தியும் புடிச்சாலும் அரசியல் வாதிகளை காணோம்? அறவாரிங்கள கேட்டலால் கை எடுத்து கும்பிடுராணுங்க? எல்லாம் ஊருக்கு உபதேச தலைவர்கள் நரி கூட்ட
பூசாரிகள் ஓ போடுற கூட்டமா இருக்கு வை பி ..போதுமடா சாமிங்கள
என்று துண்ட காணோம் துணிய காணோம் என்ற நிலைமைதான் தமிழ்த தொண்டர்களுக்கு !!!!!!??????
தமிழ்ப் பாலர் பள்ளி: நிதி உண்டு! ஆனால், செய்வார் இல்லை!ஆனால் கொள்ளை அடிப்போர் உண்டு
ஒரு சில ஆலயங்களில் பாலர்பள்ளி அமைப்பது சிறப்பு ஆனால் சில ஆலயங்களில் எடுத்து சொல்லியும் கோவில் தலைவர் சொந்த வியாபார தளம் போல் அந்நிய நாட்டவர்களை தன் சொந்த வேலையாட்களை கோவிலில் தங்க வைத்து கொண்டு[ஆசிரமம் போல் ]தொழில் நடதுகிறார் இதில் பல மனைவிகள் வேறு இதை தடுப்பத்த்க்கு ,யாரை தொடர்பு கொள்வது ,குறிப்பு ..இதில் சில நிர்வாக உறுப்பினர்கள் அவர் ஏவல் செய்து விடுவார் என்று பயந்து அவருக்கு உடந்தையாக இருக்கின்றனர் .இதை எப்படி தடுப்பது யாரை தொடர்பு கொள்வது .???ஹிந்து சங்கம் எதும் நடவடிக்கை எடுக்குமா??? இந்த ஆலயம் selangor ரில் உள்ளது
56 கோடி என்பது சிறிய தொகையல்ல. அரசாங்கம் ஏதோ கொடுக்கத்தான் செய்கிறது, வாயில் போட்டுக்கொண்டு நாடகமாடுவது ம.இ.கா, காரர்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல! நஜிப் அவர்களே கணக்கு கேட்டார் என்றால் நிச்சயமாக ஏதோ பெரிய கோளாரு இருக்கவேண்டும். குலா அவர்கள் அறிக்கை விடுவதைவிட லஞ்ச ஒழிப்பு இலாக்காவிடம் இது பற்றி தெரியபடுத்தினால் நலமாய் இருக்கும். என்ன செய்வது ! நம்மில் பேச்சு வீரர்கள் தான் அதிகம், இருந்த ஒரு செயல் வீரர் கர்பாலும் போய்விட்டார்.
எதற்கு பாலர் பள்ளி,ஆரம்பபள்ளி ஆசிரியரின் சோம்பேரிதனத்துக்கு தான் பாலர்பள்ளி,ஒன்றாம் ஆண்டு போனதும் பிஞ்சுகளுக்கு எழுத படிக்க தெரியவேண்டும்,புரிந்துக்கொள்ள வேண்டும்.பள்ளிக்கு கடமைக்கு அனுப்பி வீட்டில் டியூஷன் ஏற்பாடு செய்தால் மாத்திரம் பிள்ளைகள் தேருகின்றனர்.அதுவும் ஆங்கில மொழியில் யோசித்தால் மாத்திரமே பிள்ளைகளுக்கு ஏன் கல்வி அவசியம் பற்றி யோசிக்க முடிகிறது.நீங்களே யோசித்து பாருங்கள்.ஏன் பான்டிதுரை இப்போ தமிழ் செய்தி/கருத்துக்கலம்,நிகழ்ச்சி படைக்கவில்லையா?அவர் தமிழ்பள்ளி வாசலைகூட மிதித்ததில்லையாம் கேள்வி.பாலர் பள்ளி இல்லாததை அரசாங்கமே தெரிந்துக்கொள்ளட்டும்.ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகவல் கொடுக்கட்டும்,பிரச்சனை அவர்களுக்கு தானே.விடுமய்யா எதற்கு பிஞ்சிலே மருந்து போட்டு பலுக்க வைக்க பார்க்குறீர்.லைவ் ஈஸ் ஈசி பட் பேட் டூ அன்டர்ஸ்டான்ட்,கே,வாழ்க நாராயண நாமம்.
பொருத்திருங்கள் பாக்காத்தான் புத்ராஜெயாவுக்கு கைபற்றட்டும்,அதுவரை பொருமை காப்பதே சிரந்த வழி,ம.இ.க,வும்னோவை கேட்டு என்ன பயன்,ஒன்றும் கிடைக்கபோவதில்லை.வாழ்க நாராயண நாமம்.
தேன் எடுப்பவர்கள் புறங்கையை நக்கத்தான் செய்வார்கள். புறங்கையை நக்குவதுடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை, உள்ளங்கையை நக்கிவிட்டு புறங்கையை மட்டும் காட்டுவதால் வந்த வினைதான் தமிழனுக்கு இந்த நிலமை. இந்நாட்டில் தமிழும், தமிழனும் உயர ஒரே வழி, தமிழ் பாலர் பள்ளிகள் அதிகமாக வேண்டும். ஆரம்ப தமிழ் பள்ளிகளில் திருக்குறல் ஒரு பாடமாக வேண்டும். கனவு நனவாகுமா?.
பொன் ரங்கன் அவர்கள் குறிபிட்ட விவரங்கள் உண்மைதான். அழுத பிள்ளைக்கே பால் கிடைக்கும். எப்பகுதியில் பாலர் பள்ளி அமைக்க வேண்டும் என்று தமிழ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றதோ அவர்களே முன் நின்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்க்கு உதவியாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ம.இ.க. அரசியல்வாதிகளை நாடலாம். ஒரு சில பள்ளிக் கூடங்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு வாரியம் அமைப்பதர்க்குக் கூட ஒத்துழைப்பு நல்க விழைவதில்லை. காரணம் பள்ளி நிர்வாகத்தில் அவர்களுடைய கை தாழ்ந்து விடும் என்று ஒரு தப்பான எண்ணம். அப்படி ஒரு தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியையின் நிலையைக் கண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருந்து விலகியவர்களில் நானும் ஒருவன். இத்தனைக்கும் இந்த தமிழ்ப் பள்ளி ஆசிரியையின் பிள்ளைகள் யாரும் தமிழ் பள்ளியில் படிக்காதவர்கள். கணவரும் ஒரு தமிழ்ப் பள்ளியில் தலைமை ஆசிரியர், ம.இ.க. அடிமட்ட தலைவரும் கூட!.
உழவரே முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. திருக்குறள் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி பாட திட்டத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப் படவேண்டும். இதற்க்கு மலேசிய தமிழ் மொழி இயக்கங்களும், தமிழ் எழுத்தாளர் சங்கங்களும், கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். மேல் நடவடிக்கையும் எடுத்து தெலுங்கு சங்கம் செய்வதைப் போன்று தமிழ் மொழி எழுத்தாளர் சங்கங்கள் தனித்தும் இயங்க வேண்டும். அராசாங்கத்திடம் இருந்து காசு பணம் பறிக்க நீங்களும் கொஞ்சம் கத்துகிட்டு மக்களுக்கும் கொஞ்சம் நற்பலன்களை செய்யுங்கப்ப. ஏம்பா இப்படி சும்மா காலத்தை வீனடிச்சிட்டு போறீங்க.! பிழைக்கத் தெரியாம சங்கங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள்?.
30 வருடங்களாக சாமி வேலு நடத்திய அரசியல் நாடகத்தில் அம்னோ கொள்ளையர்கள் நம்மவர்களை எப்படி மேய்க்க வேண்டும் என்பதை முழுமையாக கற்று கொண்டனர்! இந்நிலையை மாற்றுவதற்கும் நம் உரிமைகளை நிலை நிறுத்தவும் அடிப்படை சட்ட திருத்தங்கள் உடனடியாக செயலாக்கம் பெற வேண்டும் திரு மு. குலசேகரன் அவர்களே!