‘ஹமாஸ் மற்றும் ஃபத்தா இஸ்ரேலை அங்கீகரிக்கும்’ – அப்பாஸ்

'ஹமாஸ் மற்றும் ஃபத்தா இஸ்ரேலை அங்கீகரிக்கும்' - அப்பாஸ்‘ஹமாஸ் மற்றும் ஃபத்தா இஸ்ரேலை அங்கீகரிக்கும்’ – அப்பாஸ்

பாலத்தீனத்தில் தீவிரவாதக்குழுவான ஹமாஸ் அமைப்பையும் உள்ளடக்கி அமைக்கப்படவிருக்கும் ஒற்றுமை அரசாங்கம், இஸ்ரேலையும் மற்றும் சர்வதேச கடப்பாட்டையும், வன்செயல் குறைப்பையும் அங்கீகரிக்கும் என்று பாலத்தீன அதிபர் மஃமுட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

பாலத்தீன விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவில் உரையாற்றிய அப்பாஸ் அவர்கள், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை நீடிப்பதில் தான் இன்னமும் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.

காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸுடன் அப்பாஸ் அவர்கள் ஒருமைப்பாட்டு உடன்படிக்கையை செய்ததை அடுத்து, இஸ்ரேல் பேச்சுவார்த்தையை இடை நிறுத்திக்கொண்டது.

ஒற்றுமை உடன்படிக்கைக்கு ஆதரவாகப் பேசிய பாலத்தீன அதிபர், தான் காசாவில் உள்ள தமது மக்களைக் கைவிட முடியாது என்றும், அதேவேளை தமது சமாதானத்தில் பங்காளிகளான இஸ்ட்ரேலிடம் இருந்து விலகிச் செல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.