ரஷ்யாவில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து 6.200 கி.மீ. தொலைவில், கிழக்கு சைபீரியாவில் போல்ஷயா துரா என்ற கிராமத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளது.
அதன் அருகில் உள்ள காட்டில் நேற்று திடீரென தீப்பற்றியது. இதனால் அருகிலுள்ள ஆயத கிடங்கி்ற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்த பகுதியை சேர்ந்த ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் பாதுகாப்பு காரணங்களையொட்டி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.