இஸ்ரேல் நாட்டில் சிறையில் இருக்கும் கணவர்களின் விந்தணுவை கடத்தி குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஸ்ரீஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பகை இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து கைது செய்யப்படும் தீவிரவாதிகள் 10 முதல் 18 வருடங்கள் வரை இஸ்ரேல் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது போன்ற ஆயிரக்கணக் கணக்கானவர்கள் அங்குள்ள சிறைகளில் உள்ளனர்.
ஆனால், அவர்களின் இளம் மனைவிமார்கள் கணவர்களை பிரிந்து வாடுகின்றனர். கணவன்மார்கள் வருடக்கணக்கில் சிறையில் இருப்பதால் அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத நிலை இருந்தது.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஒரு பெண் சிறையில் இருக்கும் தனது கணவரின் விந்தணுவை சாமர்த்தியமாக கடத்தி வந்து செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றார்.
அதற்கான சிகிச்சை காஷாவில் உள்ள வெஸ்ட் பேங்க் மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
அதே போன்ற முறையில், இதுவரை 15 பெண்கள் குழந்தை பெற்றுள்ளனர். எனவே, இது போன்ற முறை இங்கு பயன்படுத்தபடுகிறது. இத்தகைய செயற்கை கருவூட்டலுக்கு வெஸ்ட் பேங்க் மருத்துவமனை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூ 3 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
ஆனால் சிறை கைதிகளின் மனைவிகளுக்கு இலவசமாக இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.