உலக நகரங்களில் மக்களின் உடல நலத்தை கெடுக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது

beijing_smogஉலக நகரங்கள் பலவற்றில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார கழகம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக ஆசிய நகரங்களில் மிகவும் மோசம் என்று சொல்லும் அளவில் காற்று மாசடைந்துள்ளது.

உலகெங்கிலுமாக 91 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து அறுநூறு நகரங்களில் காற்றின் தரத்தை ஆராய்ந்து உலக சுகாதார கழகத்தின் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவுகளைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாக மாசடைந்த காற்றை பெருநகரங்களில் வாழும் மக்கள் பத்தில் ஒன்பது பேர் சுவாசிக்க வேண்டியுள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியா பாகிஸ்தான் சீனவில் பல நகரங்களில் காற்று மாசின் அளவு அபாயகரமான அளவுகளில் உள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. -BBC