குலா: மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்ற மகாதீரின் பிரகடனத்தை ஏன் மசீசவும் கெராக்கானும் ஆதரித்தன?

kulaஎதிர்வரும் புக்கிட் குளுகோர் மற்றும் தெலுக் இந்தான் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற டிஎபி கடுமையாக உழைக்கும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறினார்.
மலேசியா ஒரு ஜனநாயக மற்றும் சமய சார்பற்ற நாடாக தொடர வேண்டும் என்பதில் டிஎபி மிகத் திடமான நிலைப்பாட்டை கடைபிடித்து வந்துள்ளது. எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இருந்ததே இல்லை: இஸ்லாமிய நாட்டை உருவாக்குதல் மற்றும் ஹூடுட் சட்ட அமலாக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதோடு மலேசியா போன்ற பல்லின நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் தமது செய்தியில் கூறியுள்ளார்.
“இஸ்லாமிய நாட்டை உருவாக்குதல் அல்லது ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுதல் பக்கத்தான் ரக்யாட்டின் ஒரு பொதுக் கொள்கையாக இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை என்று நான் பல தடவைகளில் கூறியிருக்கிறேன். அதை மீண்டும் கூற விரும்புகிறேன்”, என்றார் குலா.“ஹூடுட் சர்ச்சையில் டிஎபிக்கு எதிராக தீவிரமான மற்றும் அடிப்படையற்ற முறையில் தாக்குதல் நடத்துவதன், குறிப்பாக சீனமொழி ஊடகங்கள், மூலம் மசீசவும் கெராக்கானும் மக்களை முட்டாள்களாக்கலாம் என்று எண்ணக்கூடும். ஆனால், சமய சார்பற்ற அரசமைப்பை நிலைநிறுத்துவதற்கு யாரை நம்பலாம் என்று மக்கள் தாங்களாகவே தீர்மானிப்பர்”, என்று குலா மேலும் கூறினார்.நம்பத் தகுதியற்ற மசீச மற்றும் கெராக்கானை போலல்லாமல் டிஎபி கோட்பாடுகளைக் கொண்ட கட்சி என்றாரவர்.செப்டெம்பர் 29, 2001 ஞாபகம் இருக்கிறதா?

1 mcaமசீசவும் கெராக்கானும் டிஎபிக்கு எதிரான அவற்றின் அடிப்படையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு முன்பு அவர்கள் மலேசியா mahathirஓர் இஸ்லாமிய நாடு என்று செப்டெம்பர் 29, 2001 இல் மகாதீர் பிரகடனம் செய்ததை ஏன் முற்றாக ஆதரித்தனர் என்று மக்களுக்கு விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மசீசவுக்கும் கெராக்கானுக்கும் செப்டெம்பர் 29, 2001 நிச்சயமாக ஓர் அவமான நாளாகும் என்று குலா இடித்துரைத்தார்.

எதிர்வரும் புக்கிட் குளுகோர் மற்றும் தெலுக் இந்தான் இடைத்தேர்தல்களில் ஹூடுட் பிரச்சனையை மசீசவும் கெராக்கானும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1gerakanமசீசவும் கெராக்கானும் டிஎபிக்கு எதிராக அள்ளிவிடும் பொய்க் குற்றச்சாட்டுகளை டிஎபி தகர்த்தெரியும் என்று குலா மேலும் கூறினார்.

“அடுத்த பொதுத் தேர்தலில் பிகேஆர் புத்ரா ஜெயாவை கைப்பற்ற வேண்டும் என்ற அதன் நோக்கத்தின் வேகத்தை தொடர்வதற்கு நாம் இந்த இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

“பாரிசான் வலையில் சிக்கிக்கொள்வதை பாஸ் கட்சி புத்திசாலித்தனமாக தவிர்க்க வேண்டும் என்பதோடு ஹூடுட் சம்பந்தப்பட்ட சர்ச்சையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்”, என்று டிஎபி தேசிய உதவித் தலைவரான குலசேகரன் கேட்டுக்கொண்டார்.

 

 

TAGS: