பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய சிறுமிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புக் குழு

nigerian_kidnapped_girls_001நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறப்புக்குழு துவங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான்கெர்ரி கூறும் போது நைஜீரியாவில் கடந்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்பு குழு நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் என தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 14ம்தேதி போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நைஜீரிய குழந்தைகள் கடந்தப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜீரிய மாணவிகளை மீட்க ராணுவ நடவடிக்கை இல்லை: அமெரிக்கா அறிவிப்பு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டோம். அதே வேளையில் அந்நாட்டு அரசுக்குத் தேவையான ராணுவ உதவிகள் அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

usaஇது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது:

நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தீவிர ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கா சிந்திக்கவில்லை.

ஆனால், மாணவிகளை மீட்பதற்காக நைஜீரியாவுக்கு தேவையான ராணுவம் மற்றும் சட்ட ரீதியான உதவிகள் அளிக்கப்படும். அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது குறித்து இரு நாள்களாக விவாதித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அதிபர் ஒபாமா ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மாணவிகள் கடத்தப்பட்டதால் எங்களைப் போன்று அதிர்ச்சி அடைந்துள்ள பிற நாடுகளும் நைஜீரிய அரசுக்கு சில வகைகளில் உதவ ஆர்வமாக உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து நாங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம் என்று எர்னஸ்ட் கூறினார்.