கடலுக்கு அடியில் கிளியோபாட்ராவின் அரண்மனை

celeopatra_palace_001கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன் புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த அரண்மனை புதைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட் தூண்களும், அரிய பொருட்களும் இதில் அடக்கம். கிளியோபாட்ராவின் மகனின் சிலையும், கடவுள்களின் சிலைகளும் காணப்படுகிறதாம்.

இங்கு புதையல்களும் இருக்க வாய்ப்புள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அரண்மனையில் வைக்கப்பட்ட பல பொருட்கள், வைத்தது வைத்தது போன்றே இருப்பது, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.