சுயேச்சை வேட்பாளர் முகம்மட் நபி பக்ஸ் முகம்மட் நபி சத்தார், மே 25 புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் டிஏபி-இன் ராம்கர்பால் சிங்கைத்தான் ஆதரிக்க வேண்டும் என பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார் வலியுறுத்தியுள்ளார்.
நபி பக்ஸ், தம்மை பாஸ் உறுப்பினர் எனக் கூறிக்கொண்டிருந்தால் கட்சியின் அலோசனைப்படிதான் நடக்க வேண்டும் என மாபுஸ் குறிப்பிட்டார்.
ஆனால், நபி பக்ஸ் பாஸ் உறுப்பினர் அல்ல எனத் திட்டவட்டமாக மறுத்த மாபுஸ், அவரது பெயர் கட்சி உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றார்.