அடினான்: சரவாக்கில் ஹுடுட்டுக்கு இடமில்லை

satemசரவாக்கில்  ஹுடுட்  சட்டம்  அமலாக்கப்படாது  என  அம்மாநில  முதல்வர்  அடினான்  சாதேம்  உத்தரவாதம்  அளித்துள்ளார். எனவே, எதிரணியினர்  அதைப்  பற்றியே  விடாமல்  பேசிக்  கொண்டிருக்க  வேண்டிய  அவசியமில்லை.

மாநிலச்  சட்டமன்றக்  கூட்டத்தை  முடித்து  வைத்துப்  பேசிய  அடினான், “மேன்மை தங்கிய  இம்மன்றத்தில்  ஒன்றைத்  தெளிவுபடுத்த  விரும்புகிறேன். சரவாக்கில்  ஹுடுட்  அமல்படுத்தப்படாது;  பைபிள்கள்  பறிமுதல்  செய்யப்பட  மாட்டா”,  என்றார்.

“நாம்   ஹுடுட்  சட்டத்தை  விரும்பவில்லை. எனவே,  இனி  சரவாக்கில்  ஹுடுட்  சட்டம்  பற்றிப்  பேசுவதை  நிறுத்திக்  கொள்வோம்”, என்றவர்  சொன்னார்.