உலகின் மிகப்பெரிய டைனசோரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

big_dinosaur_001இதுவரை பூமியில் வாழ்ந்தவற்றுள் மிகப்பெரிய உயிரினத்தின் உடல் எச்சங்கள் ஆர்ஜென்ரினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொன்ம உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த டைனசோரின் தொடை எலும்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் பிரகாரம், இது 40 மீற்றர் நீளமானதாகவும், 20 மீற்றர் அகலமானதாகவும் இருந்திருக்குமெனத் தெரிகிறது.

பாலைவனப்பகுதியில் வாழ்ந்திருக்க கூடிய இந்த டைனோஸர் வகை 77 டன் எடையை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 14 ஆபரிக்க யானைகளின் மொத்த எடையைக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் முன்பு கண்டறியப்பட்ட டைனோஸர் வகைகளை விட இந்த டைனோஸர்களின் எடை 7 தொன் அதிகம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.