துருக்கி சோமா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் டனீர் யல்டீஸ் கூறும் போது. மீட்பு குழுவினர் கடைசியாக 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். மொத்தம் 301 தொழிலாளர்கள் இதில் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முடிவடைந்ததும் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த விபத்து எங்களு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது என இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் 485 சுரங்க தொழிலாளர்கள் இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பியுள்ளனர்.
எனினும் இந்த விபத்தில் பலியோனோரின் மொத்த எண்ணிக்கை குறித்து புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் பல சடலங்கள் சுரங்கத்துக்குள் புதையுண்டு இருக்கலாம் என பல்வேறு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இதற்கிடையில் துருக்கி அரசு சுரங்க விபத்தில் பலியோனாரின் அஞ்சலிக்காக 3 நாள் துக்கதினமாக அறிவித்துள்ளது.