லாவோஸில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-
லாவோஸ் நாட்டின் ஏ.என்.74-300 ரக ராணுவம் விமானம், வடபகுதியான ஷியாங் குவாங் மாகாணத்தில் விழுந்து நொறுங்கியதில் டெளவாங்சே பிச்சிட் மற்றும் 5 மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் பலியாயினர். இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லாவோஸ் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு படி, 1950 ஆம் ஆண்டு முதல் 30 அபாயகரமான விமான விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.