உலகில் செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஐநா மன்றம் மீண்டும் எச்சரித்துள்ளது.
போதை தரும் புதிய புதிய ரசாயன கலவைகள் முன்பெப்போதும் இல்லாத வேகத்தில் உருவாக்கப்பட்டு வருவதை ஐநாவின் போதை மருந்து குற்ற ஒழிப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டில் புதிதாக அடையாளம் காணப்பட்ட செயற்கை போதைவஸ்துக்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகமாக இருந்துள்ளது.
தவிர இந்த போதைப் பொருள் எதற்குமே சர்வதேச போக்குவரத்து கட்டுப்பாடு கிடையாது என்ற நிலையும் இருந்துவருகிறது
மெத்தம்ஃபெட்டமைன்(Methamphetamine) என்ற போதை மருந்தினால் ஆட்கள் மூச்சையடைவதென்பது செல்வச் செழிப்புமிக்க இளைஞர்கள் அதிகமாகவுள்ள வட அமெரிக்காவிலும் கிழக்கு தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகரித்து வருவதாக ஐநா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. -BBC