பிரான்ஸின் பிரபலமான கான் திரைப்பட விழாவில் இரானிய நடிகை ஒருவர் கொடுத்த முத்தம் இரானில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இரானிய நடிகையான லெய்லா ஹடாமி அவர்கள், விழாவுக்கு வந்தபோது, அந்த விழாக்குழு தலைவரான கில்ஸ் ஜேகப் அவர்களை பார்த்து குசலம் விசாரித்து பேசியபோது அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.
இந்த முத்தமே இரானில் சர்ச்சையை கிளறியுள்ளது.
சர்வதேச விழாக்களில் கலந்துகொள்பவர்கள், இரானிய பெண்களின் மரியாதையை குறைக்காமல் நடக்க வேண்டும் என்று இரானிய துணை கலாச்சார அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், இணையத்தில் இது குறித்து கருத்துக் கூறிய பல இரானியர்கள், அந்த நடிகைக்கு சாதகமாக கருத்து வெளியிட்டதுடன், அரசாங்கம் அவரை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மணமுறிவை மையக் கதையாகக் கொண்ட இரானிய படம் ஒன்றில் நடித்ததற்காக லெய்லா ஹடாமி அவர்கள் பிரபலமானார்.
அந்தப் படத்துக்கு 2012ஆம் ஆண்டில், சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. -BBC
மக்களின் கருத்துகளுக்கு அவர்கள் மசிய மாட்டார்கள். அது ஆண்களின் சாம்ராஜ்யம். பெண்களை அவமரியாதை செய்வது என்பது அங்கு சாதாரணம்!
மாற்றான் தொட்டது மல்லிகை நல்லா மணக்குமாம்.இந்த மாதிரி பெண்களை திருமணம் முடிப்பவன் ரொம்ப நல்லவன்.பக்கத்து வீட்டுகாரர்களுக்கு( ஆண்களுக்கு) கொடுத்து ரொம்ப வசதியா இருக்கும். கொடுத்து வைத்தவர்கள்.