தாய்லாந்து அவசரக் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை

thailandAதாய்லாந்தில் அரசியல் குழப்பநிலைமையை தணிக்கும் முயற்சியாக நாட்டின் இராணுவத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த அவசர பேச்சுவார்த்தை முடிவுகள் எதுவும் இன்றி முடிவடைந்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான மற்றும் ஆதரவான ஆர்ப்பாட்ட இயக்கங்களைச் சேர்ந்த 7 வெவ்வேறு அரசியல் குழுக்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

ஆனால் தற்காலிக பிரதமர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. தனது பிரதிநிதிகளை மட்டும் அவர் அனுப்பியிருந்தார்.

தாய்லாந்து இராணுவம் இராணுவச் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்தி ஒருநாள் கடந்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இராணுவம் சதிப்புரட்சியில் ஈடுபடவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

தாய்லாந்து யாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது தெளிவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். -BBC