போகோ ஹராம் “தீவிரவாதக் குழு’: ஐ.நா. அறிவிப்பு

Boko-Haram-leaderஅல்-காய்தா தீவிரவாத குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் போகோ ஹராம் அமைப்பை “தீவிரவாதக் குழு’ என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை அறிவித்தது.

அதையடுத்து, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் அந்த அமைப்பின் பெயரையும் பாதுகாப்பு கவுன்சில் சேர்த்துள்ளது.

இதன்மூலம் போகோ ஹராம் அமைப்புக்கு தனிநபரோ அல்லது நிறுவனமோ, நிதியுதவி மற்றும் பொருளுதவி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா கூறுகையில், “போகோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிக்கும் நைஜிரிய அரசின் முயற்சிக்கு வழங்கும் ஆதரவில் இது முக்கியமான நடவடிக்கையாகும்” என்றார்.

சமீபத்தில் நைஜீரியாவின் சிபோக்கில் பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்களை கடத்திய போகோ ஹராம் அமைப்புக்கு எதிராக உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.