சோமாலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சோமாலிய நாடாளுமன்றத்தில் திடீரென ஆயுதம் ஏந்தி வந்தவர்கள் வாயிற்கதவை வெடிவைத்து தகர்த்துவிட்டு அதிரடியாக உள்நுழைந்துள்ளனர்.
விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தாக்குதல் நடைபெற்றதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து சண்டை நீடித்துவருவதாகவும், அருகிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மேற்கூரையிலிருந்தபடி தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்கைதாவுடன் தொடர்புடைய அமைப்பான அல்ஷபாப் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.