டியானாவுக்கு பாஸ் ஆதரவு: தலைவர் ஹாடி உறுதிப்படுத்தினார்

1hadiதெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்   டிஏபி  வேட்பாளர்  டியானா சோபியா  முகம்மட்  டாவுட்டைத்தான்  பாஸ் ஆதரிக்கும்.

நாடாளுமன்றத்தில்  ஹுடுட்டை  ஆதரிக்கப்போவதில்லை  என்று  டியானா  தெரிவித்திருந்தாலும்  பாஸ்  கட்சியின்  ஆதரவு  அவருக்குத்தான் என்பதை அதன்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  உறுதிப்படுத்தினார்.

“அவர்  தெளிவான  நோக்கும்  போக்கும்  கொண்ட  ஒரு  மலாய்ப்  பெண். வாய்ப்பு  கொடுத்தால்  இங்குள்ள  மக்களுக்காக  அவர்  குரல்  கொடுப்பார்  என்ற  நம்பிக்கை  எனக்கு  உண்டு”, என  ஹாடி  கூறியதாக  சினார்  ஹரியான்  அறிவித்துள்ளது.

பாஸுக்கும்  டிஏபிக்குமிடையில் கருத்துவேறுபாடுகள்  இருந்தாலும்  பேசித்  தீர்த்துக்கொண்டு ஒத்துழைக்க  முடியும்  என்றும்  ஹாடி  சொன்னார்.