பாகிஸ்தானின், லாகூர் நகரின் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினரே கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கின்றனர்.
அந்தப் பெண், தங்கள் சம்மதமில்லாமல், ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அந்தக் குடும்பத்தினர் கூறினர்.
தனது வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பெண் உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள் வரும்போது, அவரது தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒருவர் ஆகியோர் சேர்ந்து அவரை பிடித்து வைத்துக்கொண்டு, கற்களால் அவரின் தலையில் தாக்கத் தொடங்கினர் என்று போலிசார் கூறினர்.
அவரது தந்தையைத் தவிர பிற சந்தேக நபர்கள் எல்லோரும் தப்பியோடிவிட்டனர்.
அவரது தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
குடும்ப “கௌரவத்தை” காப்பதற்கு என்று பெண்களைக் கொலை செய்வது என்பது என்பது பாகிஸ்தானில் நீண்ட காலமாக நடந்து வரும் ஒரு செயல். இது குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெண்களே தங்கள் கணவர்களைத் தேர்வு செய்வது என்பது கலாசார ரீதியாக அந்தப்பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். -BBC
போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும் ! பெண் உரிமை எங்கே போனது ?
குடும்ப கௌரத்தைக் காக்க இப்படியும் ஒரு வழி உண்டு! ஆண்கள் எதைச் செய்ய வேண்டுமானாலும் செய்யலாம். அது கௌரவம்!
சமயம் என்பது மனிதனை மான்புள்ளவனாக மாற்ற வேண்டும். கல்லெறிவதற்குமுன் இயேசுபிரான் சொன்ன ,”கல்லெறிபவர்கள் இந்த உலகத்தில் பவமே செய்யாதவர்களாக இருக்கவேண்டும்” என்பதை உணர வேண்டும். அடுத்தவர்களைக் குற்றம் சொல்வது,கல்லெறிவது என்பதெல்லாம் இலகுவாக எந்தப் பாவியாலும் செய்யமுடியும்.மனிதனைப் பக்குவப்படுத்தவேண்டிய சமயம் அரக்கர்களை உருவாக்க பயன்படக்கூடாது என்பதே என் கவலை!
கல்லெறிவது நல்ல கலாச்சாரம்தான். இங்கு உள்ள தமிழ் பெண்கள்,
நீக்ரோகாரன் பின்னால் செல்லும் பெண்களை கல்லால்தான்
அடிக்கணும்.
INILAH இஸ்லா<M
என்ன கொடுமை சார்….