மாபியா கும்பல்களையும் ‘பாதிக்கும்’ பொருளாதார நெருக்கடி

godfatherஉலகப் புகழ் பெற்ற ” காட் பாதர்” என்ற நாவலை எழுதிய மரியோ புஸோ கூட இந்த நிலையை கற்பனை செய்திருக்க மாட்டார் !

உலகில் தொடரும் பொருளாதாரப் நெருக்கடி இத்தாலியின் மாபியா ( சட்டவிரோதக் கிரிமினல்) கும்பல்களையும் பாதித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

இத்தாலியின் மூத்த போலிஸ் அதிகாரி ,அலெஸ்ஸாண்ட்ரோ பான்சா, கூறுவது உண்மையாக இருக்குமானால், இந்தப் பொருளாதார மந்த நிலை, இத்தாலியில் இருக்கும் , சட்டவிரோத மாபியாக் குமபல்கள் “பாதுகாப்பு தருகிறோம்” என்ற பெயரில் நடத்தும் பணவேட்டை மோசடிகளையும் பாதித்துவிட்டிருக்கிறது.

இந்த “பாதுகாப்பு” நடவடிக்கைகளின் மூலம் மாபியாக் கும்பல்கள்களுக்குக் கிடைத்து வந்த பணத்தின் வரவு குறைந்து வருவதாகத் தெரிகிறது.

மாபியாக் கும்பல்களுக்கு, இந்த சட்டவிரோத பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பணம் தந்து வந்த , கடைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தரும் பணத்தின் அளவு குறைந்து கொண்டே வருவதாக அலெஸ்ஸாண்ட்ரோ பான்சா குறிப்பிடுகிறார்.
இந்தப் “பாதுகாப்பு நடவடிக்கைகள்” மூலம் வரும் பணம் மிகவும் மோசமான அளவு குறைந்துவிட்டதாக ஒரு மாபியா குழுத் தலைவர் புகார். கூறியதாகத் தெரிகிறது.

சிறையில் அடைக்கப்பட்ட மாபியா குழு உறுப்பினர்களின் குடும்பங்களைப் பராமரிக்கத் தேவைப்படும் பணத்தைத் திரட்டுவதில் கூட பிரச்சினைகள் எழுவதாக அலெஸ்ஸாண்ட்ரோ பான்சா கூறினார்.

ஆனால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாபியாக் குழுக்களுக்கு இந்தப் பொருளாதார நெருக்கடி வேறு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. அதாவது சட்டவிரோதமாகப் பணம் கொடுத்தல், கறுப்புச்சந்தையில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துதல், மற்றும் சட்டவிரோத கச்சாப் பொருட்களை வழங்குதல் போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதன் மூலம் இந்த நெருக்கடியிலும் புதிய சந்தர்ப்பங்களை மாபியாக் கும்பல்கள் பெறுகின்றன என்கிறார் அவர். -BBC