கர்ப்பிணிப் பெண் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் – பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்

nawasபாகிஸ்தானில் நீதிமன்றத்தின் முன்னால் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குடும்பத்தவர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கோர சம்வத்தை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாதென பாகிஸ்தானிய பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி பற்றி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அதிகாரிகளைப் பணித்தார். மூன்று மாத கர்ப்பணியாக இருந்த பர்ஸானா, ஆத்திரமடைந்த உறவினர்களால் செங்கற்களால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.

இவர் குடும்ப விருப்பத்தை மீறி திருமணம் முடித்தமை கொடுமையான தண்டனைக்குரிய காரணமாகுமென பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

தமது மனைவி அடித்துக் கொல்லப்படுகையில் பொலிசார் பார்த்துக் கொண்டிருந்ததாக பர்ஸானாவின் கணவர் குற்றஞ் சுமத்தியிருந்தார்.