எகிப்தில் ஹோஸ்னி முபாரக் பல்லாண்டு காலம் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். எனினும் மக்கள் புரட்சியின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து எகிப்தில் நடந்த தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியைப் பிடித்து, முகமது மோர்சி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு முகமது மோர்சிக்கு எதிராகவும் மக்கள் புரட்சி வெடித்தது. இதையடுத்து அவரது ஆட்சிக்கு ராணுவம் முடிவு கட்டியது.
இந்த நிலையில் அங்கு கடந்த இரண்டு தினங்களாக ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மோர்சியை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த ராணுவ தளபதி அப்துல் பட்டா எல் சிசியும், இடதுசாரி வேட்பாளர் ஹம்தீன் சபாஹியும் போட்டியிட்டனர்.
44 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்களில் 96.2 சதவீத ஓட்டுக்களை சிசி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் ஹம்தீன் சபாஹிக்கு 3.8 சதவீத ஓட்டுக்களே கிடைத்தன.