ஸ்காட்லாந்து பிரிட்டனிடமிருந்து பிரிந்து போகவேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான அதிகார பூர்வ பிரச்சாரக் கட்டம் இன்று தொடங்குகிறது.
இந்த கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரச்சாரப் பருவம் செப்டம்பர் 18ம் தேதி வரை அமலில் இருக்கும்.
செப்டம்பர் 18ம் நாள், ஸ்காட்லாந்தின் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் , ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்தின் ஒரு அங்கமாக இருக்கவேண்டுமா அல்லது சுதந்திரம் பெறவேண்டுமா என்பது குறித்த கேள்விக்கு வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள்.
இந்த பிரச்சாரப் பருவமான அடுத்த 16 வாரங்களுக்கு, பிரச்சாரத்திற்கான செலவாக 25 லட்சம் டாலர்கள் உச்சவரம்பு இரு தரப்பு பிரச்சாரக் குழுக்களுக்கு விதிக்கப்படுகிறது.
ஒலிபரப்பு நிறுவனங்கள் இந்த பிரச்சாரத்தில் பக்கசார்பற்ற முறையில் நடந்துகொள்ளுமாறு சட்டபூர்வமாக நிர்ப்பந்திக்கப்படுவார்கள். -BBC