தலிபான் கைதிகளை விடுதலை செய்தது சரியே என்கிறார் சக் ஹேகெல்

chuck_hagelஅமெரிக்க படைச் சிப்பாயான சார்ஜண்ட் போவே பேர்க்டல் அவர்களை விடுதலை செய்வதற்கு பதிலாக குவாண்டநாமோ தடுப்பு முகாமில் உள்ள 5 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கான தனது முடிவை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹேகெல் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காததற்காக சக் ஹேகெல் அவர்கள் விமர்சனத்துக்கு உள்ளானாலும், சார்ஜண்ட் போவே பேர்க்டல் இன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நம்பும் நிலையில் அதிகாரிகள் வேகமாக செயற்பட வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னதாக ஆப்ஹானிஸ்தானில் பிடித்துச் செல்லப்பட்ட இந்தச் சிப்பாய், சனிக்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கான தனது பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சக் ஹேகெல் அவர்கள், இந்தக் கைதிகள் பரிமாற்றம் தலிபான்களுடனான சமரச பேச்சுக்களில் ஒரு முன்னேற்றத்தை கொண்டுவரும் என்று நம்புவதாக கூறியுள்ளார். -BBC