சிரியா அதிபர் தேர்தல்: பஷார் அஸாதுக்கு வெற்றி வாய்ப்பு

  • சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமையன்று வாக்களிக்கும் அதிபர் பஷார் அல்-அஸாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா.
  • சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமையன்று வாக்களிக்கும் அதிபர் பஷார் அல்-அஸாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா.

 சிரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சிரியாவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, பல வேட்பாளர்கள் போட்டியிடும் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபர் பஷார் அஸாத், 3வது முறையாக மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஷார் அஸாதை எதிர்த்து, மக்களால் அதிகம் அறியப்படாத மஹேர் கஜ்ஜார், ஹசன் அல்-நெüரி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தத் தேர்தலை “மோசடி நாடகம்’ என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.