குலா: ஜாயிஸ் அதிகாரிகளுக்கு எதிராக காலிட் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

Jais1ஓர் இந்து திருமணத்தை திடீர் நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திய சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா (ஜாயிஸ்)அதிகாரிகளுக்கு எதிராக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன்.

ஓர் இந்து திருமணச் சடங்கில் ஜாயிஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை சிலாங்கூர் மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கடந்த புதன்கிழமை (ஜூன் 4) தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு இவ்விவகாரத்தை முழுமையாக விவாதித்தது என்று காலிட் இப்ராகிம் கூறினார். மேலும், இதனால் பாதிக்கப்பட்ட ஸாரினா அப்துல் மஜிட் அவரது அடையாள அட்டை சம்பந்தமாக அவர் தேசிய பதிவு இலாகவுடன் தொடர்பு கொள்ள ஜாயிஸ் அவருக்கு உதவி செய்யும் என்று அது கூறியதாகவும் காலிட் இப்ராகிம் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷா அலாமில் ஓர் இந்து கோயிலில் நடந்து கொண்டிருந்த திருமணச் சடங்கில் புகுந்து மணமகள் ஸாரினா அப்துல் மஜிட்டை இழுத்துச் சென்ற ஜாயிஸ்சின் நடவடிக்கை மிக வன்முறையானது என்பதோடு அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குலா அவரது அறிக்கையில் கூறுகிறார்.

ஆகவே, காலிட் இப்ராகிம் ஜாயிஸ்சுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருப்பதும், இனிமேல் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடும் போது ஜாயிஸ் khalidநிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறை விதிகளை (SOP) பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதும் போதுமானதல்ல என்று குலசேகரன் விளக்கினார்.

“நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறை விதிகளின்படி இதர சமயங்கள் மற்றும் இனங்கள் பற்றிய விவகாரங்களில் ஜாயிஸ் மந்திரி புசார் மற்றும் மாநில ஆட்சிக்குழுவுடன் முதலில் கலந்தாலோசிக்க வேண்டும். அனைத்து ஜாயிஸ் அதிகாரிகளும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனைக் கடைப்பிடிக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று ஊடகங்கள் காலிட்டை மேற்கோள் காட்டி இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஜாயிஸ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை விதிகளை மீறியுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. பிறகு ஏன் காலிட் இப்ராகிம் ஜாயிஸ்சிடம் மீண்டும் இரக்கம் காட்டுகிறார் என்று குலா வினாவினார்.

இவ்வாண்டு தொடக்கத்தில், ஜாயில் மலேசிய பைபில் சொசைட்டியின் கட்டடத்தினுள் அதிர்ச்சியளிக்கின்ற, சட்டவிரோதமான, வன்முறையான அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த அதிரடி நடவடிக்கை பகசா மலேசியா/இந்தோனேசியா பைபில் மற்றும் சம்பந்தப்பட்ட இதர பிரச்சனைகள் பற்றிய அமைச்சரவை எடுத்திருந்த 10 அம்ச தீர்வுகளை அறவே பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டதாகும் என்று குலா சுட்டிக் காட்டினார்.

ஜாயிஸ் மறந்து விட்டது

இந்த விவகாரத்தில் இன்னும் அதிர்ச்சி அளிப்பது ஜாயிஸ் இயக்குனர் அஹமட் ஸாஹாரின் முகமட் ஷாஆட் அளித்துள்ள விளக்கம் – ஜாயிஸ் சிலாங்கூர் மாநில அரசிடம் தெரிவிக்க மறந்து விட்டது என்பதாகும்!

ஜாயிஸ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை விதிமுறைகளை திருமண விசயத்தில் மீண்டும் மீறிவிட்டது தெளிவாக இருக்கையில், காலிட்kula இப்ராகிம் ஏன் ஜாயிஸ்சிடம் மீண்டும் மென்மையாக நடந்துகொள்கிறார்?

“ஜாயிஸ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை விதிகளை மீண்டும் மீறியதை பொறுத்துக்கொள்வதற்கு எவ்விதக் காரணமும் இல்லை. ஆகவே, காலிட் இப்ராகிம் அவரது அரசியல் வலுமையைக் காட்டி ஜாயிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்”, என்று குலா அறிக்கையில் கூறியுள்ளார்.

ஸாரினாவுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை ஓரு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் மத மாற்றத்தால் விளையும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தி அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்பதை காட்டுகிறது என்றார் குலா.

சிறுவர்கள் ஒரு தரப்பினரால் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடை செய்யும் அமைச்சரவையின் ஏப்ரல் 2009 தீர்மானத்தை அமல்படுத்துவதற்கு தேவையான சட்ட திருத்தங்கள் வரையப்படுவதை அமைச்சரவை இனிமேலும் தாமதப்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும் என்று குலா கேட்டுக்கொண்டார்.

TAGS: