அமெரிக்காவை பலவீனமாக்கிய ஒபாமா: கருத்துக்கணிப்பில் அம்பலம்

obama_010அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந்நாட்டை பலவீனப்படுத்தி விட்டார் என 55 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ‘ஒபாமாவின் ஆட்சியைப் பற்றி உங்களது கருத்து என்ன?’ என்று கடந்த முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய அளவில் 1,006 பேரிடம் தொலைபேசி மூலமாக கணிப்பு நடத்தியது.

இதில் 55 சதவீதம் மக்கள் அமெரிக்காவை ஒபாமா பலவீனப்படுத்தி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர். வெறும், 35 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் ஆட்சியில் அமெரிக்கா பலமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஒபாமாவின் ஆட்சி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆட்சியை விட செயல் திறனில் பின் தங்கியுள்ளது என 68 சதவீத பேரும், ஜார்ஜ் புஷின் ஆட்சி போல் ஆற்றலுடன் இல்லை என 48 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒபாமாவின் தலைமை தகுதியை சிறந்ததென 39 சதவீதத்தினரும், மோசமானது என 61 சதவீத மக்களும் சான்றுரைத்துள்ளனர்.

இதேபோல் ஒபாமா கடைபிடிக்கும் வெளியுறவு கொள்கை குறித்து 56 சதவீதம் பேர் அதிருப்தியும், 33 சதவீதம் பேர் திருப்தியும் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை 39 பேர் ஆதரிக்கும் அதே வேளையில், 58 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர் என்பதும் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.