திங்கள்கிழமை, 2014 ஜோகூர் வீட்டுவசதி, சொத்து வாரிய சட்டமுன்வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை எதிப்பதா, ஆதரிப்பதா என்று விழித்துக் கொண்டிருக்கிறது பக்காத்தான் ரக்யாட். அது சுல்தானின் அதிகாரம் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த இக்கட்டான நிலை.
ஆதரவாக வாக்களித்தால் சர்ச்சைக்குரிய அந்தச் சட்டமுன்வரைவை பக்காத்தான் ஆதரிப்பதாகக் கருதப்படும்.
எதிர்த்து வாக்களித்தால் எதிரணியினர் ஆட்சியாளரை எதிர்ப்பதாக பொருள் கொள்ளப்படும்.
இதன் தொடர்பில் ஜோகூர் பாஸ் தலைவரும் பாரிட் யானி சட்டமன்றத் தலைவருமான அமினொல்ஹுடா ஹசனைத் தொடர்புகொண்டு பேசியபோது, பக்காத்தான் கட்சிகள் அது பற்றி விவாதித்து வருவதாகக் கூறினார்.
ஆமாம் ஐயா அம்னோ காரனுங்க மட்டும் சாபிட்டால் போதுமா அதுதான் …….களத்தில் குதிதுட்டாணுங்க . இப்போ குத்துது குடையித்து என்றால் முடியாது.