ஜாயிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை

 

khalidசிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா அதிகாரிகள் தங்களுடைய கடமையை செவ்வனே ஆற்றுவதற்கும், அவர்களால் தகராறுகள் ஏற்படுவதை நிருத்துவதற்கும் அவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறுகிரார்.

இந்தப் பயிற்சி பட்டறையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சட்ட நிபுணர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“ஜாயிஸ் அதன் நிர்ணையிக்கப்பட்ட நடைமுறை விதிகளை மாற்றியுள்ளது. அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகளைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், நான் காணும் பிரச்சனை அதன் அமலாக்கத்தில் இருக்கிறது”, என்பதை காலிட் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில், ஓர் இந்து கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் ஜாயிஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கி மணமகள் ஒரு முஸ்லிம் என்ற சந்தேகத்தில் அப்பெண்ணை அங்கிருந்து வலிய இழுத்துச் சென்றனர். அச்சம்பவம் குறித்து கருத்துரைக்கையில் காலிட் இப்ராகிம் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

 

 

TAGS: