ஈராக்கின் மோசூல் நகரில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படை மோதல்: 59 பேர் சாவு

mosul

ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மோசூல் நகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான கடும் மோதல் இன்று இரண்டாவது நாளாக நீடித்தது.

ஜிகாதிக்கள் ராமடியில் உள்ள அன்பர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டினர். அவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 21 போலீசார், 38 தீவிரவாதிகள் என மொத்தம் 59 பேர் கொல்லப்பட்டனர்.

மோசூல் நகரில் உள்ள மைனாரிட்டி சன்னி பிரிவினரை குறிவைத்து நேற்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. நேற்று இரவு வரை சண்டை நீடித்தது. நேற்றைய மோதலில் சுமார் 36 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனவாத மோதல் தீவிரமடைந்துள்ள ஈராக்கில் கடந்த மாதம் மட்டும் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.