பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் போதுமான வசதியின்மை காரணமாக இரண்டு நாட்களில் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் மின்சாரம் தடையால் வேலை செய்யாததால் குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்துள்ளனர். 2 குழந்தைகள் நேற்றும் 7 குழந்தைகள் இன்றும் இறந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் நிர்வாகத்தை எதிர்த்து கோஷமிட்டு, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனையை சேதப்படுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வண்ணம் ஆஸ்பத்திரியை உடனே மூடினர். அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்கை பெற்று வந்த மற்ற குழந்தைகள் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிந்து கவர்னர் இஸ்ராதுல் இபாத் மற்றும் தலைமை மந்திரி க்வைம் அலி ஷா ஆகியோர் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சிறப்பு விசாரணைக்குழு உடனடியாக மருத்துவனையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.