ஒபாமாவின் பேச்சை கண்டுகொள்ளாத பிரான்ஸ்

france_flag_001ரஷ்யா நாட்டிக்கு இரு போர்க் கப்பல்களை விற்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு இரு போர்க்கப்பல்களை விற்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் லாரண்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டில் இந்தத்திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும், இந்தக்கப்பல்கள் கட்டும் பணியில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் இதில் மாற்றம் இருக்காது எனவும் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இந்தப் போர்க்கப்பல்கள் விற்பனைத் திட்டம் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு மற்றும் மிக அதிகமான வருவாய் போன்றவற்றை தான் கருத்தில் கொண்டு்ள்ள போதிலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே குறிப்பிட்ட காலத்திற்குள் பிரான்ஸ் போர்க்கப்பல்களை வழங்கினால் மட்டுமே, புதிய கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் அந்நாட்டோடு செய்துகொள்ளப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.