ஈராக்கில் பதற்ற நிலை – ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

iraq_crisis_002ஈராக்கின் மோசுல் நகரில் இருந்து சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரை முஸ்லிம் தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்து செல்கின்றவர்களில் ஈராக்கிய துருப்பினரும் உள்ளடங்குவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லிம் போராளிகள் குழு தற்போது பாரிய எரிபொருள் களஞ்சியசாலை அமைந்துள்ள பாய்ஜி பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு அவசர கால சட்டத்தை அமுலாக்குமாறு ஈராக்கின் பிரதமர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை கோரியுள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்த நடவடிக்கையானது, பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட பின்னரும் போராடும் சாதாம் ஹுசைன்

ஈராக்கை தனது கட்டிப்பாட்டில் கொண்டு வந்த அமெரிக்கா, அன் நாட்டு அதிபர் சதாமை தூக்கிலிட்டுக் கொன்றது. ஈராக்கை முதன் முதலாக அமெரிக்க கைப்பற்ற தனது படைகளை அனுப்ப இருந்தவேளை , அமெரிக்கா ஒரு அறிவித்தலை வெளியிட்டது. அதாவது சதாம் ஹுசைன் அன் நாட்டை விட்டு போகவேண்டும் என்று. அத்தோடு அதற்கு 2 வாரம் அவகாசமும் கொடுத்தது.

அமெரிக்க படைகளோடு தனது படை மோதினால், அமெரிக்காவுக்கு தான் வெற்றி நிச்சயம் என்பதனை சதாம் நன்கு அறிந்து வைத்திருந்தார். ஆனால் அவர் போட்ட திட்டமே இதுவரை பெரும் தலைவலியாக உள்ளது. எது என்ன தெரியுமா ? தனது நாட்டில் உள்ள அனைத்து ஆயுதக் களஞ்சியங்களையும் அவர் திறந்துவிட்டார். அதில் உள்ள அனைத்து வெடி பொருட்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் இலவசமாக முஸ்லீம் தீவிரவாத இயக்கங்களுக்கு கொடுத்துவிட்டார்.

இப்படி ஒரு விடையம் நடக்கும் என்று அமெரிக்கா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. கையில் கிடைத்த அனைத்து ஆயுதங்களையும் முஸ்லீம் தீவிரவாதிகள் மிக சாமர்தியமாக தமது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் சென்று புதைத்துவிட்டார்கள். சதாம் ஹுசைன் செய்திருந்தால் கூட இப்படி நேர்த்தியாக பல கிராமங்களில் சென்று இதந்த ஆயுதங்களை புதைத்து இருக்க முடியாது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்க இராணுவம் எந்த வித எதிர்ப்பும் இன்றி ஈராக்கை கைப்பற்றியது. சொல்லப்போனால் ஒரு இராணுவ வீரரின் இழப்பும் இன்றி ஈராக் அமெரிக்கா கைகளில் வீழ்ந்தது. ஆனால் அதன் பின்னர் தாலைவலி ஆரம்பமானது. முஸ்லீம் தீவிரவாதிகள் சும்மா இருப்பார்களா ? அமெரிக்க படைகள் மீது மெல்ல மெல்ல தாக்குதலை தொடுத்தார்கள். அமெரிக்கா ஈராக்கை பிடித்த பின்னர் தான் சுமார் 2,000 துருப்புகளை இழந்தது.

தற்போது ஈராக்கில் இருந்து அமெரிக்கா தனது துறுப்புகளை வெளியேற்றி வரும் நிலையில், மீண்டும் கிராமங்களையும் நகரங்களையும் முஸ்லீம் தீவிரவாதிகள் கைப்பற்ற ஆரம்பித்து வருகிறார்கள். அமெரிக்காவுக்கு இது ஒரு பெரும் தோல்வியாக கருதப்படுகிறது என்றால் மிகையாகாது. சதாம் ஹுசைனை அமெரிக்கா தூக்கில் இட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் போட்ட பிளானை இதுவரை முறியடிக்க முடியவில்லை. விவேகம் என்பது ஒருவர் இறந்தபின்னரும் செயல்படும் என்பது இதுதான் போல் இருக்கிறது