கராச்சி சர்வதேச விமான நிலையம் தாக்குதல்: திடுக்கிடும் தகவல்கள்

karachi_airport_001பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் சர்வதேச விமான சேவை பாதிக்கும் அபாயத்தில் உள்ளது.

கடந்த 8ம் திகதி கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலால் சுமார் 27 பயணிகள் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.மேலும் 7 பேரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தலீபான் பயங்கராவாத அமைப்பு பெறுப்பேற்றுள்ளது.

இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த விமான நிலையத்தின் அருகே உள்ள இராணுவ முகாமில் தீவிராவதிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் தலீபான்கள் தாக்குதல் சம்பவங்கள் விமான நிலையத்தை தொடர்ந்து அச்சுரத்தி வருவதால் விமான சேவை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது. அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு காரணங்களால் ஏற்கெனவே பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள், கராச்சியில் தங்கள் விமான சேவையை நிறுத்தியிருந்தன.

தற்போது உள்ள பயங்கரவாத தாக்குதலால், சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திகொண்டுள்ளன. கராச்சியில் விமான சேவையை தொடர்வது குறித்து அந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வாரத்தில் கராச்சிக்கு வரும் 2 விமானங்களை ஹாங்காங்கில் உள்ள எங்களது தலைமை அலுவலகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்றும் விமான சேவையை மீண்டும் தொடர்வது குறித்து இந்த வாரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் விமான நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

கராச்சி சர்வதேச விமானநிலைய தாக்குதலுக்கு உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

கராச்சின் ஜின்னா விமான நிலையத்தில் கடந்த 8ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றதை தொடர்ந்து தற்போது உஸ்பெகிஸ்தானை சேர்ந்த மற்றொரு இஸ்லாமிய இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் செயல்பட்டு வரும் உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தில் தாக்குதல் நடத்திய இளைஞர்களின் புகைப்படங்களை அந்நாட்டு இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இராணுவம் மற்றும் பயணிகளுக்கு சந்தேகமே வராதவாறு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தாக்குதல் நடத்த இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர் எனவும் உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிக் இயக்கம் குறிப்பிட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.