இந்திராவின் குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

 

indiraபாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை 30 நாள்களுக்குள் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள் என்று நேற்று ஈப்போ உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டுவரத் தவறினால் ஏன் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று போலீசார் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும்.

நீதிமன்றம் இவ்வாறான உத்தரவு பிறப்பிப்பது அபூர்வமாகும் என்று இந்திரா காந்தியின் வழக்குரைஞர் மு. குலசேகரன் மலேசியாகினியிடம் கூறினார்.

நீதிபதி லீ ஸ்வி செங் இதை அனுமதித்தது குறித்து மகிழ்ச்சியடைவதாக குலசேகரன் தெரிவித்தார்.

இது இவ்வாண்டு மே 30 இல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பின்நிகழ்வாகும் என்று அவர் மேலும் கூறினார்.

Kula - MPபோலீசாரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது

“இந்த உத்தரவுப்படி போலீசார் அக்குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால்igp அவர்கள் அதற்கான காரணத்தை சத்திய பிரமாணத்தின் வழி கூற வேண்டும்.

“இதனுடன், இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் உத்தரவுக்குப் பணிய வேண்டும். வேறு எதனையும் முன்மொழியக் கூடாது” என்றார் குலா.

கடந்த செவ்வாய்க்கிழமை, இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் வரையில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் குழந்தைகளை குழந்தை பராமரிப்பு மையத்தில் வைக்கும் ஒரு நடுவுப்பாதை ஒன்றை காலிட் முன்வைத்ததாக கூறப்பட்டது.

இப்பிரச்சனையை ஐஜிபி முன்வைத்த வழியில் தீர்ப்பதற்கு ஒரு சந்திப்பு நடத்துவதற்காக ஈப்போ போலீசார் இந்திரா காந்தியையும் தம்மையும் தொடர்பு கொண்டதாக ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் தெரிவித்தார்.

“ஆனால், நாங்கள் அந்தச் சந்திப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லை. குழந்தையைக் கொண்டு வருமாறு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கு போலீசார் கீழ்ப்படிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்”, என்றாரவர்.

 

 

 

 

TAGS: