ஆப்கானிஸ்தானில் இன்று மறு அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது

afகாபூல், ஜூன் 14–

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆப்கானிஸ்தானில் மறு அதிபர் தேர்தல் இன்று நடந்தது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எனவே, கடந்த 2001–ம் ஆண்டில் அங்கு அமெரிக்க ராணுவம் தாக்குதல் தொடங்கியது.

தலிபான் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். ஹமீத் கர்சாய் புதிய அதிபரானார். அவரது பதவிககாலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கு ஜனநாயக முறைப்படியான அதிபர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 5–ந்தேதி நடந்தது.

அப்போது 8 பேர் போட்டியிட்டனர். 70 லட்சம் பேர் வாக்களித்தனர். போட்டியிட்டவர்களில் முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா 45 சதவீதமும், உலக வங்கி முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கானி 31.6 சதவீதம் வாக்குகள் பெற்றனர். மற்றவர்கள் குறைவாகவே பெற்றனர்.

ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டபடி தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டு பெற்றவர்களே அதிபராக அறிவிக்கப்படுவார். ஆனால் முதல் கட்ட வாக்கு பதிவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

எனவே இன்று மீண்டும் மறு அதிபர் தேர்தல் நடந்தது அதில் முதல் 2 இடங்களை பிடித்த அப்துல்லா, அஷிரப் கானி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பொது மக்கள் ஓட்டு போட கூடாது என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் இன்று காலை 7 மணிக்கு வரிசையில் நின்று பொது மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

வாக்கு பதிவு முடிந்ததுதம் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதல் முடிவு வருகிற ஜூலை 2–ந்தேதி வெளியாகிறது. இறுதி முடிவு ஜூலை 22–ந்தேதி அறிவிக்கப்படுகிறது.