இராக்கில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சண்டையிடுவதற்காக தமது நாடு அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக இரானிய அதிபர் ஹஸன் ரொஹ்ஹானி கூறியுள்ளார்.
இராக்குக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இரு தரப்பும் இணைந்து வேலை செய்யலாம் என்றும், ஆனால், மேற்குலகு இராக்கிலும், வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுகிறது என்று தாம் கண்டால் மாத்திரமே அது சாத்தியம் என்றும், ரொஹ்ஹானி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
இராக்கிய அரசாங்கம் கேட்டால் தமது நாடு நிச்சயமாக அவர்களுக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமது படைகள் இராக்கில் செயற்படுவதாக கூறப்படுவதை இரான் மறுத்தாலும், ஒரு இரானிய அதிகாரி பாக்தாதில் இருப்பதாகக் கூறப்படுகிறது.