பிராந்தியத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் சீனா

china_school_001தென் சீன்கடலிலுள்ள சர்ச்சைக்குரிய தீவில் சீனா பாடசாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகளுக்ககா தென் சீன கடலில் யாங்ஷிங் தீவில் ஒரு பாடசாலை சீனா அமைத்து வருகிறது.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், வியட்நாமின் எதிர்ப்பையும் மீறி எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியைத் துவங்கியுள்ள சீனா, இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பாடசாலை கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அடுத்த 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்களுக்குச் சொந்தமானது என்று வியட்நாம் கூறி வரும் யாங்ஷிங் தீவில் உள்ள சான்ஷா நகரில் தான் சீன அரசு, தற்போது பாடசாலை கட்டடம் கட்டும் பணியை ஆரம்பித்துள்ளது. அதற்காக 34.17 கோடி ரூபாவை செலவிட திட்டமிட்டுள்ளது.

யாங்ஷிங் தீவில் பள்ளி செல்லும் வயதில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்காக இந்தப் பாடசாலை கட்டப்பட்டு வருவதாகக் சொல்லப்படுகிறது. யாங்ஷிங் தீவை, பாராசீல் தீவு என்று பெயரிட்டு வியட்நாம் அரசு உரிமை கொண்டாடி வருகிறது.

இதனிடையே, அந்தத் தீவில் 2012ஆம் ஆண்டு சீன அரசு பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கிய போது, வியட்நாம், பிலிப்பின்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சீனா ஜூலை 2012 ல் சான்ஷா உருவாக்கப்பட்ட போது, புறக்காவல் ஒரு அலுவலகம், வங்கி, பல்பொருள் அங்காடி, மருத்துவமனை மற்றும் சுமார் 1,000 பேருக்கு பயன் கிடைக்க கூடியதாக இருக்கும் என எண்ணி தென் சீனக் கடல் பகுதியில், சீன அரசு கடந்த மாதம் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியை துவங்கியபோது, சீனர்களுக்கு எதிராக வியட்நாமில் கலவரம் மூண்டது. இதில், 4 சீனர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் சீனாவுக்குத் திரும்பினார்கள்.

மேலும், நடுக்கடலில் இரு நாட்டு கடற்படைப் படகுகள் பல முறை மோதிக் கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தென் சீன கடற்பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்கள், வரலாற்று ரீதியில் தங்களுக்குச் சொந்தமானவை என்று சீனா உறுதியாகக் கூறி வருகிறது. அதற்கு, வியட்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புரூனே, தைவான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனா தங்களது இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.