ஈராக்கில் அல்கொய்தா தீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்பட்டு வருவதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தவிர்க்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் ஈராக்கில் தலைவிரித்தாடும் தீவிரவாதிகளின் அட்டூழியங்களால் அங்கு நாளுக்கு நடந்து வரும் கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.
துப்பாக்கி முனையில் பொலிசாரும் சன்னி பிரிவு இஸ்லாமியர்களும் மிரட்டப்படுவதுடன், சரமாரியாக அவர்களை சுட்டு வீழ்த்தும் காட்சிகளை இணையதளத்தில் வெளியான காணொளிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தீவிராவதிகளின் கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சர்வதேச நாடுகள் ,அமெரிக்கா தனது ஆளால்ல விமானம் மூலம் பயங்கரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன.
ஆனால் இதற்கு சரியான பதில் ஒன்றை கூறமுடியாமல் நெருக்கடிகளுக்கிடையே இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மெளம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பயங்கரவாதிகள் தாங்கள் இணையதளத்தில் வெளியிட்ட காணொளிகளின் கீழ் பொலிசாரை கிண்டலடித்துள்ள வாசங்களை எழுதியுள்ளனர்.