வெளிநாட்டு நிறுவனங்களை எச்சரிக்கும் தலீபான்கள்

tauபாகிஸ்தானை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் அகல வேண்டும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான தலீபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கராச்சி விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தலீபான்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடி கொடுக்க சபதம் மேற்கொண்டுள்ள தலீபான் இயக்கம், பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களை வெளியேறும்படி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தலீபான் செய்தி தொடர்பாளர் ஷாகிதுல்லா ஷாகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விமான நிலையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேற தயாராக வேண்டும்.இல்லையென்றால் அவர்களுக்கு ஏற்படும் பேரிழப்புகளுக்கு அவர்களே பொறுப்பாக வேண்டியிருக்கும்.

பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழப்புக்கு நவாஸ் ஷெரீப் அரசும் பஞ்சாப் அரசும் பொறுப்பாகும்.

மேலும் முஜாகிதீன்களின் பதில் தாக்குதல்கள் மூலம் வரலாற்றில் உங்கள் கதை எச்சரிக்கையாக இடம்பெறும். தலீபான் உங்கள் மாளிகைகளை கொளுத்துவார்கள். பேச்சுவார்த்தை மற்றும் அமைதி நிலவ நீங்கள் மீண்டும் கெஞ்சுவீர்கள். ஆனால் அது காலம்கடந்த முடிவாக இருக்கும் என  தெரிவித்துள்ளார்.