“ஜாகிங்” போனா ஆயுள் தண்டனை: ஜனாதிபதியின் விசித்திர சட்டம்

president_bans_jogging_001புருண்டி நாட்டில் ‘ஜாகிங்’ எனப்படும் வேக நடைபயிற்சி செல்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டி நாட்டில் மூன்றாவது முறையாக, ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யபட்டுள்ள, பியரே நக்ருஞ்ஜிஜா ( 49) அரசின் தலைமையில், அந்நாட்டு மக்களுக்கு பல அதிரடி தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பியரே கூறுகையில், அரசு விதித்துள்ள தடைகளில், அதிகாலையில் வேக நடைபயிற்சி செய்ய விதிக்கப்பட்ட தடையும் ஒன்றாகும்.

ஏனெனில் நடைபயிற்சிக்கு செல்லும் மக்கள் ஓரிடத்தில் கூடும்போது, அரசுக்கு எதிரான திட்டங்களை உருவாக்குவதாக நான் கருதிகிறேன் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக நடைபயிற்சி சென்றதை குற்றமாக கருதி அந்நாட்டில் அதிகளவில் மக்கள் சிறையிலடைக்கப்பட்டது மற்ற மக்களுக்கிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.