பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள்: எச்சரிக்கும் கேமரூன்

david-cameron_2ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் பிரிட்டனை தாக்க சதி திட்டம் தீட்டுவாதாக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பங்கேற்ற அவர் பேசுகையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சர்வதேச தீவிராவதிகள் அமைப்புகள் பிரிட்டனை அழிக்க திட்டம் செய்வதால் அவர்களால் நமக்கு ஆபத்து உள்ளது என்றும் ஆகவே பிரிட்டனில் உள்ள பாதுகாப்பு துறை, உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மத்தியக் கிழக்கு பகுதிகளை கூர்ந்து கவனித்து வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈராக் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் பிரிட்டனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாய் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.