ஜபாதான் அஹாமா பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகியவற்றுக்கு விரைந்து சென்று உதவும் போலீசார் இந்திரா காந்தியின் குழந்தை பராமரிப்பு தீர்ப்பின்படி குழந்தை பிரசன்னா டிக்சாவை இன்னும் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்காமல் இருக்கும் அக்குழந்தையின் மதம் மாறிய தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் பின் அப்துல்லாவை போலீசார் இனிமேலும் தாமதம் செய்யாமல் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இந்திரா காந்தியின் வழக்குரைஞர் மு. குலசேகரன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் போலீசை கேட்டுக் கொண்டுள்ளார்.
போலீசார் அவர்களுடைய கடமையை தவறாது ஆற்ற வேண்டும் என்று வற்புறுத்தும் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன், போலீஸ் செயல்படத் தவறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் போலீஸ்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுத்தால், போலீசாரை நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்பணிய வைப்பதற்கான உத்தரவைக் கோரும் மனுவை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்பதைத் திட்டவட்டமாக கூற விரும்புகிறோம். அம்மனுவில் போலீசாரின் நீதிமன்ற அவமதிப்பும் அடங்கும்”, என்று குலா தெரிவித்துள்ளார்.
சாபாஸ் குலா
போலிஸ் சட்டத்தைவிட இனத்திற்குதான் முதன்மை தருது.அம்னோ,பெர்காச,இஸ்மா போல போலிஸ்சும் இனவதாதுடன் செயல்பட்டால் நட்டின் நம்பிக்கையையும் நீதியையும் யார் நிலைநாட்டுவது.சட்டத்தை மதிக்க வேண்டிய போலிஸ் வேடிக்கை பார்க்கிறது.
தொடரட்டும் உங்கள் சேவை. வழக்கறிஞர் மன்றத்துடனும் இணைந்து செயல்படவும்!!!!!
ஐய குலா …. சட்டம் அவர்களின் பாக்கெட்டில் …இருக்குதையா ….உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் …
தேடுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுக்குத் தெரியும் ஆசாமி எங்கே இருக்கின்றார் என்று. கொஞ்சம் கிளந்தான் பக்கம் போய் தேடி பாருங்கப்பா.
ஒரு வேளை பத்மநாதன் காணாமல் போன மாஸ் விமானத்தில் ஏதும் அகப்பட்டுக் கொண்டாரோ!
சட்ட படி தட்டி கேட்கும் குலாக்கு, பாராட்டுகள் …!
mic ipf இக்கு கொட்டுகள் …!
ஊமைகள் …..!
மா இ கா தலைவர்கள் உப்பு சப்பு இல்லா விஷயத்தை பிடித்து கொண்டு காவடி தூகுவதர்குதன் லாயக்கு ஐ பி யெப் தலைவர் ஒருவர் சில்ங்கோர் தமிழ் பள்ளிக்கு சென்று ஒரு 1,000ரிகிட் கொடுதுவிட்டு பள்ளி ஆசீரியர்கள் எல்லாம் எங்களை கண்டுகொள்வதே இல்லை என்று புலம்பிக்கொண்டே சென்றாராம் அற்ப புகழுக்காக ! வெற்றியோ ? தோல்விய ? நம் சமுதயத்ற்கு துணிச்சலாக குரல் கொடுக்கும் தலைவன் தான் தேவை உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் !!!!!!!!
சாபாஸ் குலா
சபாஷ் குலசேகரன் அவர்களே… தொடரட்டும் உங்கள் சேவை…
எம்ஐசி தலைவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்கலாமா வேண்டாவா என்று மத்திய செயலவைக் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவங்களை நம்பி…. போங்கப்பா வேற வேலையை பாருங்கப்பா..