பாக்தாத்: ஈராக்கில் கிளர்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் 40 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் எழுந்துள்ளது. இந்தியா- ஈராக் தூதரக அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போர் தற்போது முற்றியுள்ளது. இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் யாரும் வெளியேற முடியாமல் உள்ளனர். ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை மனித கேடயமாக பயன்படுத்த கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது இந்தியர்கள் மத்தியில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
பஞ்சாப், அரியானா : வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையீது அக்பரூதீன், கூறுகையில், இந்திய, ஈராக் நாட்டு அதிகாரிகள் இருவரும் இணைந்து இந்தியர்களை தங்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
பஞ்சாப், அரியானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மொசூல் நகரில் தவித்து வருகின்றனர். இவர்களை காப்பாற்ற வேண்டும் என உறவினர்கள் மாநில, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.