முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவர்181 ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை

egyptகெய்ரோ:எகிப்தில், பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள், 182 பேருக்கு மரண தண்டனை விதித்து, எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

அரசு கலைப்பு:ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள அரபு நாடுகளில் ஒன்றான எகிப்தில், முன்னாள் ராணுவத் தளபதி சிசி தலைமையிலான அரசு உள்ளது. இங்கு, கடந்த ஆண்டில் அதிபராக இருந்த, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியைச் சேர்ந்த, முகமது முர்சி தலைமையிலான அரசு, கடந்த ஜூலையில், அப்போதைய ராணுவத் தளபதி சிசியால் கலைக்கப்பட்ட போது, தலைநகர் கெய்ரோவில் பயங்கர கலவரம் நடந்தது.

 

அதை ராணுவம் ஒடுக்க முற்பட்டபோது, பயங்கர வன்முறை நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; ராணுவத்தினர் பலரும் உயிரிழந்தனர்.இந்த வன்முறை குறித்து, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர், முகமது பாதி மற்றும் அவரின் ஆதரவாளர்கள், 182 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம், தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அதில், அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம், அந்நாட்டின் பழமையான அரசியல் கட்சியான, முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு சாவுமணி அடித்துள்ளார், அதிபர் சிசி.

 

கண்டனம்:இதை, சர்வதேச நடுநிலை அமைப்புகளில் ஒன்றான, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கண்டித்துள்ளது. எதிர்ப்பாளர்களை நசுக்கும் முயற்சி இது என,அந்த அமைப்பு கண்டனம்

தெரிவித்துள்ளது.