சதாம் ஹூசைனுக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்!

satham-hussein-judgeஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கு மரண தணடனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்.

ரவூப் அப்துல் ரஹ்மான் (69) என்ற இந்த நீதிபதி 2006 ம் ஆண்டு சதாம் ஹூசைனுக்கு தூக்குத் தண்டனை வழங்கினார்.

இந்தநிலையில் நீதிபதி கொலை செய்யப்பட்டமையை ஈராக்கிய அரசாங்கம் உறுதிசெய்யவில்லை.

எனினும் அவர் கொலை செய்யப்பட்டமையை அந்த அரசாங்கம் மறுக்கவில்லை.

தகவல்களின்படி கடந்த 16 ஆம் திகதியன்று அவர் போராளிகளால் கைதுசெய்யப்பட்டு பின்னர் இரண்டு நாட்களில் கொல்லப்பட்டுள்ளார்.

ஈராக்கின் பல பகுதிகளை சன்னி பிரிவு போராளிகள் கைப்பற்றி வருகின்றனர்.

இந்தநிலையிலேயே நீதிபதி ரஹ்மானும் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் தமது இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போதும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

நீதிபதி கொடூரக்கொலை:

இந்நிலையில் சதாம் ஹுசைன் உதவியாளர் இசாத் இப்ராஹிம்-அல்-நூரி என்பவர் தனது பேஸ்புக் வாயிலாக வெளியான செய்தியில், இரசாயன குண்டுகள் பயன்படுத்தியதற்கு கடந்த 2006-ம் ஆண்டு பாக்தாத் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ராவூப் அப்துல் ரஹ்மான், ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்தனர். இவ்வாறு பேஸ்புக் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட நீதிபதி ராவூப் அப்துல் ரஹ்மான், குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவர். தீர்ப்பளித்த அடுத்த ஆண்டே தனக்கும் இவரது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனவும் அடைக்கலம் தருமாறு பிரிட்டன் அரசை 2007-ம் ஆண்டு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோர்டான் எம்.பி., கலீல் அட்டியே தனது பேஸ்புக்கில் எழுதியுள்ள கருத்துக்களின் படி புரட்சியாளர்களை எல்லாம் கைது செய்த காரணத்தாலும் சதாமுக்கு மரண தண்டனை விதித்தார். அதற்கு பதிலடியாக இச்சம்பவம் இருக்கலாம் என்றார்.

மேலும் ராவூப் அப்துல் ரஹ்மான், நடன கோலத்தில் மாறுவேடமிட்டு பாக்தாத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சதாம் ஹுசைன் அன்று உதிர்த்த வார்த்தைகள்… இன்று உண்மையானது! 

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அன்று மண்ணில் உதிர்த்த வார்த்தைகள் இன்று நிறைவேறிவிட்டது.

தனக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள் இதோ,

நீ… அமெரிக்காவின் பேச்சினை கேட்டு எனக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளாய். ஆனால் உன்னுடைய மரணம் நிகழப்போவது என்னுடைய மக்கள் கையால் தான் என்பதை மறந்துவிடாதே என்று கூறியுள்ளார்.

அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையாகி போனது இன்று. ஆம், சதாம் ஹுசைனை தூக்கிலிடும்படி தீர்ப்பு வழங்கிய நிதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் போராளி படைகள் பிடித்து அவரை தூக்கிலிட்டனர்.

சதாமிற்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதிக்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது.