ரஷ்யாவை கடுமையாக எச்சரிக்கும் ஒபாமா

obama Bயுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை நிறுத்துமாறும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை தவிர்க்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளை ரஷ்யா நிறைவேற்றாவிட்டால், மேலும் பொருளாதார தடைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என ஒபாமா எச்சரித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது யுக்ரேனுக்கும் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஒபாமா வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பிரிவினைவாதிகள் தரப்பு யுக்ரேன் ஜனாதிபதி பற்றோ பொரஷெங்கோ அறிவித்துள்ள போர் ஓய்வை அவதானிப்பதாக தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் ஜனாதிபதியின் 15 அம்ச சமாதான திட்டத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள போர் ஓய்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று நிறைவடைகின்றது.