சற்றுமுன்னர் அமெரிக்க கமாண்டோக்கள் ஈராக்கில் குதித்தார்கள்: 300 பேரை மட்டுமே அனுப்பியுள்ளார் ஒபாமா !

Operation Iraqi Freedomஈராக்கில் ISIS தீவிரவத அமைப்பினர் தொடர்ந்தும் தாக்குதலை, பலப்படுத்தி வருகிறார்கள். இன் நிலையில் ஈராக் இராணுவத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அமெரிக்கா அவர்கள் மீது வான் தாக்குதல் நடத்தவேண்டும் என்று ஈராக் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். அதனை ஓபாமா அவ்வளவாக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் சுமார் 300 கமாண்டோக்களை மட்டும், அதிரடியாக அமெரிக்கா இன்று ஈராக்கில் களமிறக்கியுள்ளது என்று மட்டும் அறியப்படுகிறது. இவர்கள் ஐ.எஸ்.ஐ. எஸ் அமைப்போடு நேரடியாக யுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்களோடு சண்டையிட்டு வரும் ஈராக் இராணுவத்திற்கு அவர்கள் தந்திரோபாயங்களை காட்டிக்கொடுக்கவே அங்கே சென்றுள்ளதாக ஓபாமா அறிவித்துள்ளார்.

இதேவேளை ஈராக்கில் உள்ள மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளார்கள். இதனைக் கைப்பற்ற நடந்த சண்டையில் சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கமாண்டோக்கள் ஈராக்கில் முதலில் வேவுப்பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், அதன் பின்னரே வான் தாக்குதல் பற்றி ஒபாமாவின் நிர்வாகம் தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் பாக்கிஸ்தான் எல்லையில் கடும் விமானத் தாக்குதல் நடாத்தும் அமெரிக்கா, ஏன் ஈராக் மீது தாக்குதல் நடத்த இவ்வளவு தூரம் பின்னடிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.